கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் உட்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போய் வந்தது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மற்றும் ஓசூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் மத்திகிரி வட்ட காவல் ஆய்வாளர் திரு.P.பிரகாஷ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (எ) திவீப், முகமது அவேஸ் மற்றும் சக்திவேல் ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடியது தெரி வந்ததால் தனிப்படை போலீஸாரால் இன்று (03.05.2024) ம் தேதி அதிகாலை சுமார் 05.30 மணியளவில் மேற்படி குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விலை உயர்ந்த பல்சர் -5. ஹோண்டா டியோ 4, யமஹா R-15- 4, ஹோண்டா ஷைன் – 1, யமஹா RX-100 ஆக மொத்தம் 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.18,00,000/- ஆகும். தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினர் மூலம் விசாரணை
செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்