காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரவணன் த/பெ.மணி, பெருமாள் கோயில் தெரு, போந்தவாக்கம் என்பவர் அவரது வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு.
விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஜனா 18 அண்ணா நகர், கூரம் மற்றும் சூர்யா (19 அரசமரத்தெரு, கூரம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து களவுபோன இருசக்கர வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். களவுபோன இருசக்கர வாகனத்தை விரைவாக மீட்ட காஞ்சி தாலுக்கா காவல்நிலைய காவலர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.சுதாகர், அவர்கள் வெகுவாக பாராட்டினார்.