கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் ஆனந்த் என்பவர் போச்சம்பள்ளி சிப்காட்டில் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் (16.03.2025) ஆம் தேதி இரவு கம்பெனியில் வேலை முடித்து விட்டு தன்னுடன் பணிபுரியும் பிரேம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஓலப்பட்டி கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஜோஸ்வா ஜூஸ் சென்டர் என்ற கடை முன்பு சுமார் 03.15 மணிக்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன் HP லேப்டாப்பினை டேங்க் கவர் மீது வைத்துவிட்டு டீ சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும் இரண்டு நபர்கள் வந்து டீ சாப்பிட்டுவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டு வெளியே வந்து திடீரென தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து புலியூர் பக்கமாக சென்று விட்டதாகவும் இருவரும் பின்னால் ஓடி பிடிக்க முயன்ற போது வேகமாக சென்று விட்டதாக கல்லாவி காவல் நிலையம் ஆஜராகி ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம், லேப்டாப் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், லேப்டாப்பை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்