திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவிற்கு முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வினோத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஆனந்த் மீது மோதினார் இதில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வினோத்குமார் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் திமிராக பாதயாத்திரை பக்தர்கள் தான் பார்த்து வரவேண்டும் வெள்ளை கோட்டை தாண்டி வரக்கூடாது என்று திமிராகவும், தெனாவட்டாகவும் பேசினார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா