மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பழவேற்காடு கோட்டைகுப்பதை சேர்ந்த திவ்யா வ/33. இடது கால் முட்டிக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. திவ்யாவின் இரு குழந்தைகள் மற்றும் கணவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கடந்த ஒரு வருடத்தில் இது நான்காவது விபத்து என்று சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் 26, 2025 அன்று இதே இடத்தில லாரியும் காரும் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு