திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மருதாணிகுளத்தை சேர்ந்த ராஜபாண்டி(30).என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி சம்பவம் குறித்து செம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா