திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை சேர்ந்த குமரகுரு என்பவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் குமரகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா