கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இழுப்பகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் அவர் கடந்த (28.01.2026) ஆம் தேதி காலை சுமார் 10.15 மணிக்கு ஊத்தங்கரை ஸ்டேட் பேங்க் முன்பு உள்ள ஜெனரேட்டர் அருகில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காலை சுமார் 10.30 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என அக்கம் பக்கம் கேட்டும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் யாரோ திருடி சென்று விட்டதாக தெரிந்து (16.02.2026) ஆம் தேதி ஊத்தங்கரை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















