கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் லோகநாதன் என்பவர் MSM தோட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் (07.11.2025) ஆம் தேதி காலை சுமார் 11.30 மணிக்கு கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்காக வங்கி அருகில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என (20.11.2025) ஆம் தேதி லோகநாதன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















