திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, ஜோதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்து விக்ரம். (23). இவர் (07.12.2024)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் ரூ 80 ஆயிரம் மதிப்புடைய இருசக்கர வாகனத்தை காணவில்லை என (08.12.2024)-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் மீது வழக்கு பதிவு செய்து, இளஞ்சிறார் நீதி குழுமத்தின் முன் ஆஜர் படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்