திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், புளியங்குடி, பகுதியை சேர்ந்த திருமலை குமார் (19). என்பவர் (14.10.2024) அன்று தனது இருசக்கர வாகனத்தில் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தோணித்துறையில் உள்ள உறவினர் வீட்டில் நிறுத்தி இருந்தார். பின்பு வந்து பார்த்த பொது அங்கு இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து திருமலை குமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், நாஞ்சில் பிரித்விராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கீழ தோணித்துறை, மேலத் தெருவை சேர்ந்த மகேஷ் (20).முரளி (24).பரத் (26). ஆகிய மூவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூவரையும் (21.10.2024) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்