கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் லோகேஷ் கைஷ்மன் மராடி என்பவர் உத்தனப்பள்ளி சசி என்பவரின் காம்ப்ளக்ஸில் குடியிருந்து கொண்டு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (10.05.2024) ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு தான் குடியிருக்கும் காம்ப்ளக்ஸ் முன்பு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை சுமார் 08.00 மணிக்கு வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணவில்லை என நண்பரின் உதவியுடன் அக்கம் பக்கம் விசாரித்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என (18.05.2024) ஆம் தேதி உத்தனப்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் CSR ரசிது வழங்கப்பட்டது, பதிவு செய்திருந்த மனு ரசீதை பரிசீலனை செய்து (17.11.2024) ஆம் தேதி வழக்குப் பதிந்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து போலீசார் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்