கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபரப்பள்ளி கிராமத்தில் வீரபையா ரெட்டி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த (02.07.2025) ஆம் தேதி காலை சுமார் 08.00 மணிக்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை தனது தோட்டத்தில் சாவியுடன் விட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத யாரோ ஒரு நபர் தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து சென்றவரை தொடர்ந்து சென்று அக்கம் பக்கத்தில் இருந்த தோட்டக்காரர்கள் ஓடி வந்து பிடித்துக் கொண்டனர். பின்பு விசாரித்த போது அதே ஊரில் உள்ள கன்னியம்மா கோயில் பூட்டை உடைத்ததை பார்த்த அதே ஊரைச் சேர்ந்த மாரப்பாவும், முனிராஜியும் சத்தம் போட்டதையடுத்து குற்றவாளி தப்பிக்க வீரபையா ரெட்டியின் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றது தெரியவந்தது. பின்பு தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியை அழைத்து சென்றனர். வீரபையா ரெட்டி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்