கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள VAO ஆபீஸ் பின்புறம் உள்ள 7 ஹில்ஸ் வாட்டர் கம்பெனி அருகே மற்றும் ஓசூர் தேர் பேட்டையில் உள்ள புகார்தாரர் தங்கி இருக்கும் வீட்டின் முன்பு ஆகிய இரண்டு இடங்களில் முறையே (30.09.2025) மற்றும் (07.10.2025) ம் தேதிகளில் இரவு நிறுத்தி இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடு போய்விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் இரண்டு இடங்களில் இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.