தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மாதாபுரம் பகுதியில் வசித்து வரும் யூதா பிராங்க்ளின் என்பவர் (26.02.2022) அன்று) கடையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வருவதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் திரு.ராஜா தனஞ்செயன், திரு. கிருஷ்ணகுமார் மற்றும் பாவூர்சத்திரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. குமரேச சீனிவாசன், காவலர்கள் திரு.வேல் குமார், திரு.மகேஷ் ஆகியோர் கடையம் முதல் பாவூர்சத்திரம் வரையிலான C.CTV கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு சென்று பாவூர்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட மெஞ்ஞானபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற சிவந்தி புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகனான விக்னேஷ் @ பூரி கணேஷ் 23. என்ற நபரை மடக்கி பிடித்தனர்.இதுகுறித்து மேற்படி நபர் மீது சார்பு ஆய்வாளர் திரு. கோபால் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை 1.30 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்..