சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புல்லட் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவர் வீட்டின் முன் கடந்த டிசம்பர். 15ம் தேதி இரவு இவரது தம்பியின் புல்லட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது காலையில் பார்க்கும்போது புல்லட்டை காணவில்லை. இது குறித்து நித்தியா நெற்குப்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புல்லட் பொன்னமராவதியில் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நெற்குப்பை போலீசார் பொன்னமராவதி சென்று புல்லட்டை வைத்திருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில். அவர்கள் பொன்னமராவதி இந்திரா நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்( 28). ராமன் மகன் சுப்பிரமணியன்( 36 ). என்பது தெரிய வந்தது. இவர்கள் புல்லட்டை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்