திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பெட்டைக்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சேர்ந்த கணபதி (50). என்பவரை சோதனை செய்தபோது, அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 144 மது பாட்டில்களுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















