திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே ஊத்துப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரவணன் மற்றும் அவரது அக்கா பாக்கியலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியதால் உடனடியாக தனது காரில் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்மைய நாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரின் இச்செயலை வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா