தென்காசி : குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகன் செய்யது சுலைமான் தாதா பீர் (22). தென்காசி ஜம்ஜம் நகர் சையது சுலைமான் என்பவரின் மகன் முகமது தெளபிக் (21). தென்காசி மாதா கோவில் ஒன்றாம் தெரு புவனேச பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (21). ஆகியோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.