கள்ளக்குறிச்சி : சமூக வலைதளபக்கத்தில் TN 15 MD 3139 (Pulsur- 220 CC) என்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவெண்கொண்ட இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அதிகப்படியாக செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமாகவும், தலைகவசம் அணியாமலும் அஜாக்கிரதையாக இயக்கி அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் என நன்கு தெரிந்துகொண்டே சாகசம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டது. தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக ஊடகப்பிரிவு மூலம் புகார் தெரிவிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா., இ.கா.ப., அவர்கள் உத்தரிவிட்டார்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த சாந்திபூஷன் மகன் நித்திஷ்குமார் (24). என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவரது நண்பன் திருச்சி, மலைக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் மகன் தர்மேஷ்(20). என்பவர் கடந்த (17.12.2023)- ந் தேதி உளுந்தூர்பேட்டை to சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நீலமங்கலம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்தது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டது தெரியவந்ததை தொடர்ந்து சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து தர்மேஷ்சை கைது செய்து விசாரணைக்குபின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்து விதமாக வாகனங்கள் ஒட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.