தென்காசி : சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த பங்களா சுரண்டையைச் சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் சாலமன் பிரவீன் (20). என்ற நபருக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூபாய் 10,500 அபராதம் விதிக்கப்பட்டு அவரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.