திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, முள்ளிப்பாடியை அடுத்த செட்டியபட்டி பிரிவு அருகே நான்கு வழி சாலையில் கடந்த 3-ம் தேதி இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆரோக்கியசாமி(82). பலியானார் படுகாயம் அடைந்த சீனிவாசன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேற்படிக்கு சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா