தூத்துக்குடி: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவாநகரைச் சேர்ந்த சேகர் மகன் ஜோஸ்வா 25. என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த (11.10.2022), அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் கேன்டீன் அருகே நிறுத்தி வைத்திருந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. அதேபோன்று கடந்த (11.10.2022), அன்று தூத்துக்குடி அமுதாநகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் போஸ்கோ என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து மேற்படி காணாமல் போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜா மகன் முகேஷ் (எ) முனியசாமி (23), தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வேம்புராஜ் மகன் மணிராஜ் (22), தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3சென்ட் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் செல்வம் (23), முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இருளாண்டி மகன் பாலகிருஷ்ணன் (22), மற்றும் தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (22), ஆகிய 5 பேரும் மேற்படி 2 இருசக்கர வாகனங்களையும் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவகுமார், மற்றும் போலீசார் மேற்படி 5 குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முகேஷ் (எ) முனியசாமி மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உட்பட 6 வழக்குகளும்,குற்றவாளி மணிராஜ் மீது 2 வழக்குகளும், குற்றவாளி செல்வம் மீது தென்பாகம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகளும், குற்றவாளி இசக்கி செல்வம் மீது தென்பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.