கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்கள் மே 30ஆம் தேதி ஓசூரில் ஏலம் விடப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார். மதுவிலக்கு வழக்குகளில் 56 இருசக்கர வாகனங்கள், 38 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 94 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் மே 30-ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்