கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் பிரபு என்பவர் போலுப்பள்ளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியராக வேலை செய்து வருவதாகவும் (19.08.2025) ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை மருத்துவமனை இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டதாகவும் மறுநாள் காலை சுமார் 07.30 மணிக்கு வேலை முடித்து வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணவில்லை என பல இடங்களில் தேடி கிடைக்காததால் குருபரப்பள்ளி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.