திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த (11.01.2025) அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குற்ற சம்பவங்கள், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்க, பாளையங்கோட்டை சரகத்திற்கு 2 இரு சக்கர ரோந்து வாகனங்களும், சந்திப்பு, டவுண், மேலப்பாளையம் சரகத்திற்கு தலா 1 இரு சக்கர ரோந்து வாகனங்கள், என மொத்தம் 05 இரு சக்கர ரோந்து வாகனங்கள் (துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன்) துவக்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக (01.02.202) அன்று காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம் S.விஜயகுமார் தலைமையில் மேலும் 04 இரு சக்கர ரோந்து வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்