மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் (5 நான்கு சக்கரம் மற்றும் 4 இருசக்கர) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற (15 .03.2025)-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (14 .03.2025)-ம் தேதி மாலை 5 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பார்வையிட்டுக் கொள்ளலாம்.
வாகனங்களை மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (15.03.2025) அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் ஐந்தாயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும் மற்றும் GST கணக்கு எண் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%ம், இருசக்கர வாகனங்களுக்கு 12% என முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த் அவர்கள் தெரிவிக்கின்றார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்