இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், IPS அவர்கள் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைக்கப்பட உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















