இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து, சரகத்திற்குட்பட்ட காவல்துறை செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேலும் வலுப்படுத்தி செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியும், நேர்மையான மற்றும் துரிதமான நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















