இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இராமநாதபுரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெறும் குற்றச்செயல்கள், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
















