கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பையாங்குளம் கிராமத்தைச் சோர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி ராஜாமணி 72. என்பவர் வீட்டில் சக்கரை வியாதி மாத்திரை போட்டு தூங்கியபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 57 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று திருநாவலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப,. அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் மேற்பார்வையில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு.குமார் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள், திரு.பன்னீர்செல்வம், திரு.பிரபாகரன், திரு.தனசேகர், மாவட்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ராஜவேல் மற்றும் காவலர்களுடன் கூடிய 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படையினர் சம்பவ இடங்களில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் உளுந்தூர்பேட்டை,கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மாரி @ மாரிமுத்து 31, விழுப்புரம் மாவட்டம், சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உதயா 24, கடலூர் மாவட்டம், பெரிய காட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் 32, செடுத்தான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ்25. மற்றும் விருத்தாச்சலம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கஃபாரூதீன் 23. ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கடலூர் மத்திய சிறையில் தலைமை காவலராக பணிபுரியும் தொப்பையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமணி 40. என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மேற்கண்ட ராஜாமணி என்பவர் வீட்டில் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதாக கூறி மேற்கண்ட நபர்கள் மூலம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து ஆறு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 பவுன் நகை மற்றும் 3,20,000/- ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.