தேனி: தமிழக முதல்வரின் ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து, மக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிடும் வகையில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .என வலியுறுத்தி இராயப்பன்பட்டி காவல் நிலையத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு கிராமங்கள் தோறும் இரவு நேரங்களில் பிரச்சாரம் நடக்கிறது.ஆனைமலையன்பட்டி அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர், ஜே.கே.ரவி கிராம கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போலீஸார் உடன் செல்கின்றனர்