திண்டுக்கல் : (08.04.2023), திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா சந்திப்பில் (07.04.2023) அன்று பாரத பிரதமர் வருகை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு, இரவு நேரங்களில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா