திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டி ரயில் மீது மைசூரில் இருந்து சென்ற பாக்மதி பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி விபத்து. 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் இரண்டு பெட்டியில் தீ விபத்து. இரயில் விபத்துக்குள்ளான பகுதிக்கு இரயில்வே அதிகாரிகள் விரைந்தனர். ஆம்புலன்ஸ்கள்,மருத்துவ குழு, மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் சரக்கு இரயிலின்மீது மைசூரில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற பாக்மதி பயணிகள் அதிவிரைவு ரயில் மோதியதில் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதன் காரணமாக 8 பேர் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.19 கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கும்மிடிப்பூண்டி பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் இல்லாத சூழலில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 23 பெட்டிகளில் 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் மருத்துவ குழுவினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு