திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இந்த இரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம். அப்படி இரயில் வரும் நேரத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த இரயில்வே கேட்டை சிலர் நடந்து செல்வது வழக்கம் அப்படி இன்று மாலை சுமார் 7 மணி அளவில் இந்த இரயில்வே கேட்டை கடக்க முயன்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் இரயில் வருவது தெரியாமல் இருப்பு பாதையை கடந்துள்ளனர். அப்பொழுது இருவரில் ஒருவர் இரயில்வே கேட்டை வேகமாக கடந்த நிலையில் பின்னால் வந்த வட மாநில தொழிலாளி விரைவு இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் குறித்து சரியான விவரங்கள் தெரியவில்லை. அவருடன் வந்தவர் சக நண்பர் விபத்தில் அடிபட்டு உயிரிழந்ததை பார்த்து அழுது கொண்டே ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிர் இழந்தவர் யார் அவர் எங்கிருந்து வந்தார். எங்கு செல்கிறார். எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இனிதான் விவரம் தெரியவரும். மேலும் இந்த விபத்து குறித்து இரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விபத்து நடந்த இடத்தில் இரயில்வே பாதுகாப்புத்துறை சார்ந்த இரண்டு காவலர்கள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து தமிழ்நாடு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர்கள் வந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு