சென்னை: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தியாகராஜன் 33, எண்ணூர் ரயில்வே பணிமனையில் முதுநிலை பகுதி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். மீஞ்சூர் – அனுப்பம்பட்டு இரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை இரயில் தண்டவாளத்தில் இருந்தபடி பொறியாளரும், உதவியாளரும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் இரயில் இருவர் மீது மோதியுள்ளது. இரயில் மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் இரயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பொறியாளர் தியாகராஜன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஒப்பந்த தொழிலாளி சீனிவாசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக தியாகராஜன் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு