திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது அதனை பறிமுதல் செய்த இரயில்வே போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி செல்வது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா