மதுரை: தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை (நுடீஊஜனு) அவர்களின் உத்தரவின் பேரில், இரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இரயில்களில் சோதனை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறுவுறுத்தலின் பேரில், மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி கடந்த (19.10.2025)-ம் தேதி காவல் ஆய்வாளர், திருமதி.கண்ணத்தாள், திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மேற்கு வங்கம், புருளியாவிலிருந்து தென்காசி வாராந்திர இரயிலில், முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் சோதனை செய்த போது, யாரும் உரிமை கோராமல், கேட்பாரற்று கிடந்த பேக்கினை சோதனை செய்த போது அதில் 4 பார்சல்களில் மொத்தம் 7.750 கி.கிராம் கஞ்சா போதை வஸ்து இருந்தது. அதனை கைப்பற்றி திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர்.
அதே போல் அதே இரயிலில் பயணித்து வந்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீசான்ராம்,40 என்பவரை சோதனை செய்த போது அதில் 5.600 கி.கிராம் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்து, மேற்படி நபர் மீது சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது. மேலும் கடந்த (22.10.2025)-ம் தேதி காவல் ஆய்வாளர், திருமதி.கவிதா, மேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் குருவாயூர் வாராந்திர இரயிலில், முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் சோதனை செய்த போது, யாரும் உரிமை கோராமல், கேட்பாரற்று கிடந்த பேக்கினை சோதனை செய்த போது அதில் 2 பார்சல்களில் மொத்தம் 3 கி.கிராம் கஞ்சா போதை வஸ்து இருந்தது. அதனை கைப்பற்றி மேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















