திருநெல்வேலி : ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய இராணுவத்தால் (07.05.2025) அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக
திருநெல்வேலி மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். மேலும் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளின் உடைமைகளையும், இரயில்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் உள்ளனவா எனவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகரில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்