திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை கடக்கும்போது பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற இரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா