திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கும் புஷ்பத்தூர் இரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பழனி இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















