திருப்பூர் : திருப்பூர் மாநகரத்தில் தெற்கு காவல் நிலையத்தில் T.S.K. நகரில் பூட்டியிருந்த வீட்டில் 26 ½ சவரன் தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் செல்போன் ஆகியவற்றை கொள்ளை அடித்த மற்றும் வி.ஜி.வி. கார்டன் பகுதியில் இரவில் வீட்டில் புகுந்து 4 ¾ சவரன் நகையை கொள்ளை அடித்தது ஆகிய வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து களவு சொத்துகள் முழுவதும் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன்,இ.கா.ப அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜ்குமார் (வயது 38), ஜெகன் கார்த்திக் (எ) ஜெகன் (வயது 35), மேற்கண்ட நபர்கள் மீது விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சென்னை எக்மோர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 1 வழக்கும், பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.