தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான வாவாநகரம் உண்மை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் மகனான குமாரவேல்(45) மற்றும் கடையநல்லூர் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியான வல்லம் கலைஞர் காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அருண்பாண்டியன் ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.