திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு (22.01.2026) முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, (22.01.2026) அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த, 490 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில், 414 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அதில் 330 விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் (23.01.2026) அன்று உடல் தகுதி தேர்வுக்கு 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில், 414 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். அதில் 336 விண்ணப்பதாரர்கள்,அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளனர்.
(22.01.2026) மற்றும் (23.01.2026) ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 666 விண்ணப்பதாரர்களுக்கு, (24.01.2026) முதல் உடல் திறனாய்வு தேர்வு (Physical Efficiency Test) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையிலும்,
மாவட்ட தேர்வு மையத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், மாநகர காவல்துறை ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பிலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















