திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்/சிறை காவலர்கள்/ தீயணைப்பாளர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு (22.01.2026) முதல் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த 985 விண்ணப்பதாரர்கள் பங்கு பெற உள்ளனர். இத்தேர்வினை சிறப்பாகவும் , பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இத்தேர்வு பணியில் ஈடுபடும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு தேர்வு நடைமுறை தொடர்பாக ஒத்திகையும் (21.01.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தேர்வு மையத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர், முனைவர். நெ. மணிவண்ணன், இ.கா.ப., மாநகர காவல் ஆணையர் கலந்து கொண்டு தேர்வு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















