தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (62).என் றகுற்றவாளியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் (24.12.2025) கயத்தாறு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 142 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















