அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற 2 பெண்களை கொலை செய்த வழக்கில் கழுவந்தோண்டி கிராமம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39) என்பவரை (26.10.2022) அன்று காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா சோமசுந்தரம் அவர்கள் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளி பால்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று (2.12.2022), அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறையில் வழங்கப்பட்டன.