குமரி:.கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கோஷ்டிகள் இடையே நடந்த மோதலில் 2 பேர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அகஸ்தீஸ்வரம் சாமி கோவில் தெருவை சேர்ந்த பாகீஸ்வரன் 21 ராஜேஸ்வரன் (27 ) முத்துக்குமார்( 21)ஆகிய 3 பேரை மீது கொலை மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி திரு.பத்ரிநாராயணன், கலெக்டர் திரு.அரவிந்த்க்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.