அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரிய பாளையம் கிராமத்தில் (22.10.2022), அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் தலையில் தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அரியலூர் காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, உத்தரவின்படி ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கலைகதிரவன், அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையில் கழுவந்தோண்டி கிராமம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39), தான் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் பால்ராஜை கைது செய்து அவரிடமிருந்து இறந்த பெண்ணின் 6 1/2 பவுன் தாலிச் செயின் கைப்பற்றினார்கள். இதை தொடர்ந்து பால்ராஜ் (26.10.2022), இன்று செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் படி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.