கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சாமல்பள்ளம் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட
ஸ்ரீ ரங்கநாதர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் EXCAVTOR BREAKER VEHICLE என்ற இயந்திரத்தை இயந்திரத்தின் ஆப்ரேட்டர் (16.02.24)ம் தேதி மாலை வேலை முடித்து பாலத்தின் அருகே நிறுத்திவிட்டு ஓய்வுக்கு சென்று மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது இயந்திரம் அங்கு காணவில்லை. கல் உடைக்கும் இயந்திரம் திருடு போனதையடுத்து ஸ்ரீ ரங்கநாதா கன்ஸ்ட்ரக்ஷன் பங்குதாரரான வாதியானவர் சூளகிரி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து போலீசார் 21 இலட்சம் மதிப்பிலான கல் உடைக்கும் இயந்திரத்தை திருடிய ஐந்து நபர்களை கைது செய்து இயந்திரத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்